இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் எல்லையில் குவிப்பு

சனி, 28 நவம்பர் 2015 (09:02 IST)
இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான லஸ்கர்–இ–தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ்–இ–முகமது ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


 
 
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தீவிரவாத அமைப்பான லஸ்கர்–இ–தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ்–இ–முகமது ஆகிய இயக்கங்களின் தலைவர்களை அண்மையில் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது.
 
இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த அந்த இயக்கங்கள் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலுக்காக 30 தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. 
 
பனிப்பொழிவு அதிகரிக்கும் முன்பாக இந்தியாவுக்கு நுழையுமாறும் தீவிரவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்காக அனைத்து மாநில அரசுகளும் உஷார் நிலையில் இருக்குமாறும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்