வேலூரில் சிகிச்சை பெற்று வந்த கேரள காங்கிரஸ் தலைவர் மறைவு!

புதன், 22 டிசம்பர் 2021 (15:24 IST)
கேரளாவைச் சேர்ந்த பி டி தாமஸ் கணைய புற்றுநோய்க்காக வேலூர் சி எம் சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

கேரள காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் திருகாட்கரை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பி டி தாமஸ் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். மேல் சிகிச்சைக்காக அவர் வேலூர் சி எம் சி மருத்துவமனையில் சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்