காரை முந்தி சென்றதால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவன்

திங்கள், 9 மே 2016 (14:32 IST)
ஐஜத பெண் தலைவரின் மகன் தன் காரை முந்தி சென்றதால் ஆத்திரம் அடைந்து ஆதித்யா என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.


 

 





பிஹார் மாநிலம் கயா பகுதியில் ஆதித்ய சச்தேவா(19). கடந்த சனிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் காரில் சென்றபோது சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த ‘ரேஞ்ச் ரோவர்’ காரை முந்திச் சென்றார்.
 
அப்போது, அந்தக ‘ரேஞ்ச் ரோவர்’ காரில் இருந்த ஐக்கிய ஜனதா தள சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் மனோரமா தேவியின் மகன் ராக்கி ஆத்திரம் அடைந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, காரை நிறுத்துமாறு சத்தம் போட்டுள்ளார். உடனே ஆதித்யா காரை நிறுத்தி உள்ளார்.
 
பின்னர் ராக்கி மற்றும் பாதுகாவலர்கள் காரில் இருந்த ஆதித்யா மற்றும் அவரது நண்பர்களை வெளியே இழுத்து  சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அப்போது அதித்யாவை துப்பாக்கியால் சுட்டதில் ஆதித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இதுகுறித்து ஆதித்யாவின் நண்பன் காவல் துறையிடம் கூறுயதாவது:- 
 
நாங்கள் காரை நிறுத்தியதும், அவர்கள் ஓடி வந்து எங்களை அடித்து உதைத்தனர்,
நாங்கள் அந்த இடத்தை விட்டுச் செல்ல தயரான போது யாரோ ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஆதித்யா இறந்துவிட்டான்,
 
கார் டிரைவர் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் தான் துப்பாக்கி இருந்தது என்று கூறியுள்ளான்.
 
மேலும், ராக்கி தலைமறைவாவதற்கு உதவியதாக இருந்த அவரது தந்தை பிந்தேஷ்வரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
இறந்த ஆதித்யா மற்றும் அவனது நண்பர்கள் சமீபத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வை எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்