வருமான வரித்துறை சோதனையால் வெங்காயம் விலை வீழ்ச்சி

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (13:34 IST)
வெங்காய வியாபாரிகளுக்கு சொந்தமான இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதையடுத்து வெங்காயம் விலை 35 சதவிதம் குறைந்தது.


 

 
மாராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள லசல்கான் வேளாண் உற்பத்தி சந்தை இந்தியாவிலேயே மிகப்பெரிய வெங்காய சந்தை ஆகும். நாசிக் பகுதியில் உள்ள 7 பெரும் வெங்காய வியாரிகளுக்கு சொந்தமாக இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இதனால் வெங்காயத்தின் விலையில் பெருமளவு சரிவு ஏற்பட்டது.
 
இதுகுறித்து புனே பிராந்திய மூத்த வருமான வரித்துறை அதிகாரி கூறியதாவது:-
 
லசல்கான் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், விலையை உயர்த்த அவர்கள் முயற்சித்து வருவதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்தே சோதனை தொடங்கியது என்றார்.
 
மேலும் இந்த சோதனை இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1400க்கு விற்ற 1 குவிண்டால் வெங்காயம் வருமான வரித்துறையினர் சோதனைக்கு பிறகு ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.900க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்