தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய அமைச்சர்

ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2015 (10:59 IST)
நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் அம்மாநில அமைச்சர் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 

 
நேற்று இந்திய தேசத்தின் 59ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதே போன்று, நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள குருநானக் அரங்கத்திலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
 
அவ்விழாவில், மாநில சிறப்பு விருந்தினராக அமைச்சர் பிக்ராம் சிங் மஜிதிஹா கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். அப்போது, அவர் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியுள்ளார். முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இவ்விழாவில், தேசியக்கொடி தலைகீழாக பறந்ததை கவனிக்காமல் இருந்துள்ளனர்.
 
பின்னர் சுமார் 1 மணி நேரத்துக்குப்பின், இந்த தவறை அதிகாரிகள் கண்டுபிடித்து சரி செய்தனர். இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மந்திரி பிக்ராம் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்