விமானத்தில் பறக்கும் பழைய ரூபாய் நோட்டுகள்: தீயா வேலை செய்யும் அரசியல்வாதிகள்

புதன், 23 நவம்பர் 2016 (14:53 IST)
அரியானா மாநிலத்தில் இருந்து நாகலாந்துக்கு விமானம் மூலம் அரசியல்வாதியின் ரூ.3.5 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்லப்பட்டது. சிக்கிய பழைய ரூபாய் நோட்டுகள் மாயமானதில் அரசியல் வாதிகள் கைவரிசை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


 

 
அரியானா மாநிலம் சிர்சா நகரில் இருந்து நாகலாந்து மாநிலம் திமாப்பூருக்கு நேற்று காலை ஒரு தனியார் விமானம், நிறைய பெட்டிகளுடன் சென்றது. நாகலாந்து செல்லும் விமானத்தில் கோடி கணக்கில் பணம் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் சென்றது.
 
உளவுத்துறை அதிகாரிகள் திமாப்பூர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கைப்படுத்தினர். திருமாப்பூர் வந்த சேர்ந்த விமானத்தை வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அதில் ஏராளமான பண பெட்டிகள் இருப்பது தெரியவந்தது.
 
பழைய ரூபாய் நோட்டுகள் ரூ3.5 கோடி மதிப்பில் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இந்த பணம் தொழில் அதிபர் அமர்ஜித்குமார்சிங்குக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. வருமான வரித்துறையினர் அமர்ஜித்குமார்சிங்கிடம் விசாரணை செய்ததில், இந்த பணம் டெல்லியில் உள்ள பிரபல அரசியல்வாதிக்கு சொந்தமானது என்று கூறியுள்ளார்.
 
இதற்கிடையில் அந்த பழைய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் மாயமாகி உள்ளது. அந்த பணத்தை யார் எடுத்து சென்றது தெரியவில்லை என்றும், அதுகுறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்