ஹெல்மட் போட்டால் மட்டுமே பெட்ரோல் போடலாம்! – வருகிறது புதிய சட்டம்

புதன், 15 ஜூன் 2016 (15:20 IST)
ஹெல்மட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்ற புதிய சட்டத்தை ஐதராபாத் மாநில அரசு அமல்படுத்தப்படுத்த உள்ளது.
 

 
ஐதராபாத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லும் சட்டம் அமலில் உள்ள நிலையில் வாகன ஓட்டிகள் இச்சட்டத்தை சரியாக கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
தினமும் 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இதையடுத்து ஹெல்மெட் கட்டாய சட்டத்தை தீவிரப்படுத்தும் முயற்சியில் போக்குவரத்து காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
 
இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து, சட்டம்-ஒழுங்கு காவல்துறையினர் மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரிகள் ஒருங்கிணைந்த கூட்டம் நடந்தது. இதில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என்று விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 
ஏற்கனவே, இந்த விதிமுறை தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஐதராபாத் நகரில் இம்மாத இறுதியில் அமலுக்கு வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்