பிரபல ’தாதா’வின் மகளை காதலித்த காதலனை கொலை செய்த வழக்கு: 25 ஆண்டுகள் சிறை

செவ்வாய், 4 அக்டோபர் 2016 (19:05 IST)
நிதிஷ் கட்டாரா கொலை வழக்கில் குற்றவாளிகள் விகாஷ் யாதவ், விஷால் யாதவுக்கு தலா 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரபல தாதா டி.பி.யாதவ். இவர் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் தலைமறைவு தாதாவாக இருந்தவர். இவர், 1970ஆம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக மதுபான தயாரிக்கும் கும்பல் நடத்தி வந்தவர். இவர் மீது அப்போது 9 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தது.
 
பிறகு 1989ஆம் ஆண்டு முலாயம் சிங் அரசில் கேபினட் அமைச்சராகவும், நான்கு முறை மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
டி.பி.யாதவின் மகள் பார்தி யாதவை அதே மாநிலத்தை சேர்ந்தவர் நிதிஷ் கட்டாரா. இதற்கு டி.பி.யாதவ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் கடந்த 2002 பிப்ரவரி 17ஆம் தேதி நிதிஷ் கட்டாராவும் பார்தியும் தில்லி அருகேயுள்ள காஜியாபாத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அங்கிருந்து நிதிஷ் கட்டாராவை பார்தியின் சகோதரர் [டி.பி.யாதவின் மகன்] விகாஷ் யாதவ், உறவினர் விஷால், சுக்தேவ் பல்வா ஆகியோர் கடத்திச் சென்று கொலை செய்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த தில்லி நீதிமன்றம் விகாஷ் யாதவ், விஷால், சுக்தேவ் பல்வா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நிதிஷ் கட்டாராவின் தாயார் நீலம் கட்டாரி புதுடெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் விகாஷ் யாதவ், விஷால் யாதவ் ஆகிய இருவருக்கும் 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, நிதிஷ் கட்டாரா கொலையை ஆணவக் கொலை என்றும் தெரிவித்துள்ளது.
 
இதில் 5 ஆண்டுகள் சாட்சிகளை கலைத்ததற்காக விதிக்கப்பட்டது. ஆனால் மரண தண்டனை விதிக்க மறுத்துவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்