வங்கி தலைமை செயல் அலுவலர்களுடன் உரையாடும் நிதியமைச்சர்: புதிய கடன் சலுகை கிடைக்குமா?

ஞாயிறு, 10 மே 2020 (19:13 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாளை பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அலுவலர்களுடன் காணொளியில் கலந்துரையாட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு புதிய கடன் வழங்குவது குறித்த அறிவிப்பு மற்றும் சலுகை வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக ஆர்பிஐ ஊக்குவிப்புத் திட்டங்களை சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை காணொளி மூலம் பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அலுவலர்களுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்துரையாடவுள்ளார் 
 
இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் கடன் வட்டி விகிதம் குறைப்பு, கடன், புதிய கடன் வசதி, ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் இஎம்ஐ தள்ளிவைப்பு ஆகியவை குறித்து அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்