இந்து பெண்கள் வேற்று சமூகத்தினரை திருமணம் செய்ய கூடாது - மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (16:22 IST)
இந்து பெண்கள் வேற்று சமூகத்தினரை  திருமணம் செய்ய கூடாது என்று உணவு பதப்படுத்துதல் துறை  இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் பேசியிருப்பது சர்ச்சஒயை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஆலப்புழையிலுள்ள ஸ்ரீ  நாராயண குரு ஜெயந்தி விழாவில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாத்வி  நிரஞ்சன் ஜோதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசிய்டபோது,

இந்து பெண்கள் மற்ற சமூகத்தை சார்ந்த ஆண்களை திருமணம் செய்யக் கூடாது எனவும் இது இந்து சமூகத்தை நலிவடைய செய்யும் எனவும், பெண்பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள்  இந்த விஷயத்தில் விழிப்புடன் இருக்க  வேண்டும் என் கூறினார். மேலும் அவர் 2011 ஆம் ஆண்டின் மத அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை குறிப்பிட்டு இது  நாட்டின் சமநிலையின்மை மற்றும் அழிவை கூறுகிறது எனவே இந்துக்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது எனக்கூறினார்.

அமைச்சர் சாத்வி இதுபோன்று சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறுவது புதிதல்ல. கடந்த டிசம்பர் மாதம் வாக்காளர்களிடம் பேசும்போது ராமருடைய பிள்ளைகளுக்கு வாக்களியுங்கள் மற்றவர்கள் தவறானவர்கள் என்று சர்ச்சைக்குறிய கருத்தை கூறி விவாதத்துக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்