பரதநாட்டியம் ஆடி அசத்திய 92 வயது பாட்டி : வைரல் வீடியோ

வியாழன், 7 ஜனவரி 2016 (15:23 IST)
பெங்களூரில் பரத நாட்டியம் ஆடிய 92 வயது பாட்டியின் நடன வீடியோ தற்போது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


 

 
கடந்த திங்களன்று, பானுமதி ராவ் என்கிற 92 வயது பாட்டி பெங்களூரில், கடவுள் கிருஷ்ணனை பற்றிய ஒரு பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி அசத்தியுள்ளார்.  நரைத்த முடியோடும், சுருக்கமான முகத்தோடும், அவர் அபிநயம் பிடித்து ஆடுவது பரவசத்தை ஏற்படுத்தியது.
 
அவர் ஆடிய அந்த வீடியோவை அவரது மகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். ஒரே இரவில் 1 லட்சம் பேர் அந்த வீடியோவை பார்த்து ரசித்தனர். இப்போது அது 6 லட்சத்தையும் தாண்டி போய் கொண்டிருக்கிறது. மொத்தம் 10,000 பேர் இதுவரை அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்கள்.
 
பாட்டியின் நடனத்தை நீங்களும் பார்த்து ரசியுங்கள்...
 

வெப்துனியாவைப் படிக்கவும்