8 ஆயிரத்து 975 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அரசு நடவடிக்கை

செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (11:27 IST)
வெளிநாட்டு நிதிபெறும் 8 ஆயிரத்து 975 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்துசெய்துள்ளது,
 
2009–10, 2010–11, 2011–12 ஆகிய நிதியாண்டுகளுக்கான ஆண்டு கணக்கை தாக்கல் செய்யுமாறு 10 ஆயிரத்து 343 தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீசு அனுப்பியது. அதற்கு 229 நிறுவனங்கள் மட்டுமே பதில் அனுப்பின.
 
இதைத் தொடர்ந்து, எவ்வித பதிலும் வராததால், 8 ஆயிரத்து 975 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
 
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களில், நோட்டீசு பட்டுவாடா செய்யப்படாமல் திரும்பி வந்த 510 நிறுவனங்களும் அடங்கும்.
 
வெளிநாட்டு நிதி பெறும் ‘கிரீன்பீஸ் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனத்தின் உரிமம் சமீபத்தில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்