புதிய சேவை வரி: சாப்பாடு முதல் போன் ரிசார்ஜ் வரை கட்டணங்கள் உயர்வு

புதன், 1 ஜூன் 2016 (18:39 IST)
புதிய சேவை வரி இன்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து சாப்படு முதல் போன் ரிசார்ஜ் வரை கட்டணங்கள் அதிகரித்துள்ளது.


 

 
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசு பட்ஜெட்டில் 15% சேவை வரி ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இந்த புதிய சேவை வரி திட்டத்தால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஓட்டல் சாப்பாட்டு கட்டணம் முதல் மொபைல் போன், போன் ரிசார்ஜ் கட்டணம், ரயில் முன்பதிவு கட்டணம், காப்பீடு பாலிசி கட்டணம் ஆகியவையும் அதிகரிக்கும்.
 
புதிய சேவை திட்டம் அமலுக்கு வரும் முன்பு நேற்று நள்ளிரவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதில் இன்று புதிய சேவை வரி மூலம் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்