பொற்கோவிலில் பாத்திரங்களை கழுவிய அரவிந்த் கெஜ்ரிவால்

புதன், 20 ஜூலை 2016 (02:51 IST)
சீக்கியர்களின் புனித நூலை ஆம் ஆத்மி கட்சியினர் அவமதித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, புதுடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பொற்கோவிலில் பாத்திரங்களை கழுவினார்.
 

 
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மாதம் சீக்கியர்களின் வழிபாட்டு தளமான பொற்கோவிலில் வழிபட்டு, ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
 
தேர்தல் அறிக்கையில் முதல் பக்கத்தில், பொற்கோவில் பக்கத்தில், கட்சி சின்னமான துடைப்பம் இருந்தது. இதனால் பலத்த சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
 
இந்நிலையில், திங்களன்று பொற்கோவிலுக்கு வந்த கெஜ்ரிவால், இளைஞரணி செயலாளர் ஆசிஷ்கேத்தன், பஞ்சாப் மாநில தலைவர் சஞ்சய் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பாத்திரங்களை கழுவினர். தொடர்ந்து பக்தர்களுக்கு உணவு பரிமாறினர். அதன்பின், அதிகாலை வழிபாட்டிலும் பங்கேற்றனர். இதன் பின்னர் கிளம்பி சென்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்