மோடியின் ஆட்சியில் இந்தியா பின் நோக்கி செல்கிறது: நயன்தாரா குற்றச்சாட்டு

புதன், 7 அக்டோபர் 2015 (08:50 IST)
மோடியின் ஆட்சியில் இந்தியா பின் நோக்கிச் செல்வதாக நேருவின் மருமகள் நயன்தாரா ஷாகல் குற்றஞ்சாட்டி உள்ளார்.


 
 
தாத்ரி சம்பவத்தை  தொடர்ந்து ஆங்கில நாவல் எழுதியதற்கு வழங்கப்பட்ட சாகித்ய அகடாமி திரும்ப கொடுப்பதாக நயனாதாரா ஷாகல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சியாளர்கள் பாசிச கொள்கையை கடைபிடிக்கிறார்கள். அது எனக்கு கவலையை அளித்துள்ளது.
 
அண்மையில் முகமது அக்லாக் என்பவர் அவரது வீட்டில் மாட்டிறைச்சி சமைத்ததாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைசெய்யபட்ட இந்தியர்களின் நினைவாகவும், எதிர்ப்பை தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்கும் இந்தியர்களை ஆதரிக்கவும், நான் சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுக்கிறேன்.
 
மோடியின் ஆட்சியில் இந்தியா பின் நோக்கி செல்கிறது. கலாச்சார பன்முகத்தை நிராகரித்துவிட்டு இந்துத்துவாவை நோக்கி செல்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்