நீட் தேர்வு கட்டணம் உயர்வு: மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி

வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:23 IST)
இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டணம் அதிகரிப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நீட் தேர்வு கட்டணம் கடந்த ஆண்டு பொதுப் பிரிவினருக்கு ரூபாய் 1500 இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூபாய் 100 அதிகரித்து 1600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது 
 
அதேபோல் EWS மற்றும் ஓபிசி பிரிவினருக்கு நீட் தேர்வு கட்டணம் 1400 ரூபாய் இருந்த நிலையில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டு 1500 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 
 
பட்டியலினத்தவர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நீட் தேர்வு கட்டணம் 800 ரூபாய் என்றிருந்த நிலையில் தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்