ராமாயணத்தின் பாடல்களின் டிஜிட்டல் பதிப்பை வெளியிடுகிறார் நரேத்திர மோடி

திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (10:55 IST)
டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் ராமாயணத்தின் டிஜிட்டல் பதிப்பகத்தை  பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.
 
வால்மீகி முனிவரால் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட பழம்பெருமை வாய்ந்த இதிகாசங்களில் ஒன்று ராமாயணம். இதை துளசிதாசர் என்பவர் ஹிந்தி மொழியியில் "ராம்சரித்மானஸ்" என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார்.
 
மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குனர் சமர் பகதூர் சிங் என்பவர் ராமாயணத்தை பிரபல பாடகர்களால் பாடப்பட்டு 1980 ஆம் ஆண்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
 
பின்னர், இந்த பாடல்கள் வடஇந்திய வானொலி நிலையங்களில் தினந்தோறும் ஒலிபரப்பப்பட்டு வந்தன. இந்த பாடல்களின் டிஜிட்டல் பதிப்பு அகில இந்திய வானொலி நிலையத்தால் தற்போது,  தயாரிக்கப்பட்டுள்ளது.
 
ராமாயணத்தின் பாடல்களின் டிஜிட்டல் பதிப்பை டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.
 
இந்த நிகழ்ச்சியில் நிதி மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி, அகில இந்திய வானொலி நிலைய தலைமை குழுமமான பிரசார் பாரதியின் தலைவர் ஏ.சூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்