நேபாள சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் நரேந்திர மோடி

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (07:53 IST)
பிரதமர் நரேந்திர மோடி நேபாள நாட்டில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

நரேந்திர மோடி நேபாள நாட்டில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேபாளத்துக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் சென்ற இந்திய பிரதமர், நரேந்திர மோடி தான்.

இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. நேபாள அதிபர் ராம்பரன் யாதவ், பிரதமர் சுசில் கொய்ராலா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை மோடி சந்தித்துப் பேசினார்.

நேபாள நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றினார். பல்வேறு நிகழ்ச்சிகளிர் பங்கேற்றார் பின்னர் அங்குள்ள பழமையான பசுபதிநாத் கோவிலை வழிபட்டார்.

இதைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில், இரு நாடுகளின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உறவுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர்.

பின்னர் விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்