பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

சனி, 20 செப்டம்பர் 2014 (08:58 IST)
பிரதமர் நரேந்திர மோடியை ‘மைக்ரோசாப்ட்’நிறுவனத்தின் நிறுவனரும், உலகப்பெரும் பணக்காரருமான பில் கேட்ஸ்  டெல்லியில் சந்தித்தார்.
 
இந்த சந்திப்பின் போது அவர், பிரதமர் மோடி சமூக சுகாதார திட்டத்தில் கவனம் செலுத்துவதற்கும், அனைத்து மக்களுக்கும் வங்கிக்கணக்கு தொடங்கும் நோக்கத்துடன் ‘ஜன தன யோஜனா’ திட்டத்தை செயல்படுத்துவதற்கும் பாராட்டு தெரிவித்தார்.
 
இதேபோன்று, பில் கேட்சின் சமூக சேவைகளை மோடி பாராட்டினார்.
 
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பெரும்இழப்பை சந்தித்துள்ள காஷ்மீர் மாநிலத்துக்கு உடனடி நிவாரணமாக 7 லட்சம் டாலர் நிதி (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4¼ கோடி) வழங்குவதாக பில்கேட்ஸ் தெரிவித்தார்.
 
மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோரையும் பில்கேட்ஸ் சந்தித்துப் பேசினார்.
 
அப்போது கிராமப்புற சுகாதார மேம்பாடு, மோடி அரசு தொடங்கியுள்ள பிரமாண்ட கிராமப்புற சுகாதார பிரசார இயக்கத்தில் தாங்கள் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறு பற்றி பில்கேட்ஸ் விவாதித்தார்.
 
பில் கேட்ஸ்ச உடன், அவரது மனைவி மெலிந்தா கேட்சும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்