நீர்முழ்கிக் கப்பலில் பயணம் செய்யும் நரேந்திர மோடி

செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (02:19 IST)
பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்ய உள்ளார்.
 
விசாகப்பட்டினத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி அன்று சர்வதேச கடற்படை கண்காட்சி நடைபெற உள்ளது.  இந்தக் கண்காட்சியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார்.
 

 
இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் நாட்டை தவிர்த்து, ஏனைய சுமார் 90 நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் அழைப்பை ஏற்று, சீனா உள்ளிட்ட 46 நாடுகள் கலந்து கொள்வதை விருப்பம் தெரிவித்துள்ளன.
 
இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் நரேந்திர மோடி, நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 1988 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி ஐ.என்.எஸ். சக்கரா நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த போது, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, அந்தக் கப்பலில் பயணம் செய்தார். அதன் பிறகு, நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் இரண்டாவது பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்