நரேந்திர மோடியின் ஆஸ்திரேலியப் பயணம்: ஆலோசனை வழங்க மக்களுக்கு அழைப்பு

திங்கள், 27 அக்டோபர் 2014 (14:40 IST)
பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ள நிலையில், ஆலோசனைகளை முன்வைக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இந்தியா மட்டுமில்லாது ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களும், சுற்றுப்பயணத்தின் போது அவர்களது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
 
பிரதமரின் ஆஸ்திரேலிய பயணத்தின் போது விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்த ஆலோசனைகளை பதிவு செய்வதற்குகாக மத்திய அரசின் MyGov வெப்சைட்டில் தனியாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
 
‘நவம்பர் மாதத்தில் எனது ஆஸ்திரேலிய பயணத்தின்போது அங்கு வாழும் இந்தியர்களை சந்திப்பது முதல் பல நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன்.
 
ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய நண்பர்களிடம் மட்டுமில்லாது, உங்கள் எல்லோரிடமிருந்தும் ஆலோசனைகளை வரவேற்கிறேன். ஆஸ்திரேலிய பயணத்தின் போது நான் விவாதிக்க வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்த உங்கள் ஆலோசனைகளை http://mygov.in/groupissue/prime-minister-in-australia/show என்ற தளத்தில் பதிவு செய்யுங்கள்‘ என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். 
 
முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 18 ஆம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட்டை சந்திக்கிறார். மியான்மரில் இருந்து சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் மோடி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பிரிஸ்பேனில் நடக்கும் ஜி 20 மாநாட்டிலும் கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்