நாகலாந்து ஆளுநர் ராஜினாமா

வெள்ளி, 11 ஜூலை 2014 (12:23 IST)
நாகலாந்து மாநில ஆளுநர் வைக்கம் புருஷோத்தமன் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சி அமைத்ததும், அக்கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு ஆளுநர் பதவி கொடுக்க முன்வந்தது.

இதனால் கேரள ஆளுநர் ஷீலா தீட்சித் உட்பட பல ஆளுநர்களை ராஜினாமா செய்ய உள்துறை அமைச்சம் கேட்டுக்கொண்டது.

ஆனால், ஷீலா திட்சித் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதனால் அவரை நாகலாந்து ஆளுநராக மாற்ற மத்திய அரசு முடிவு செய்து.

இந்நிலையில் நாகலாந்து ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்