நாகலாந்து, திரிபுராவில் திடீர் திருப்பம்: ஆட்சியை பிடிக்கின்றது பாஜக

Webdunia
சனி, 3 மார்ச் 2018 (12:20 IST)
திரிபுரா மாநிலத்தில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியை பிடிப்பது யார்? என்று இழுபறியில் இருந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

திரிபுராவில் மொத்தமுள்ள 59 தொகுதிகளில் பாஜக 43 தொகுதிகளில் தற்போது முன்னிலை வகிக்கின்றது. சிலமணி நேரங்களுக்கு முன் 30 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த மார்க்கிஸ்ட் திடீரென 16 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிகின்றது. இதேமுன்னிலை தொடர்ந்தால் பாஜக இம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் நாகலாந்து மாநிலத்தில் என்பிஎஃப் கட்சி 32 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. ஆனால் தற்போது அந்த கட்சி 24 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இம்மாநிலத்தில் பாஜக தற்போது 32 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் இங்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பு அமைந்துள்ளது.

மேகாலயாவில் மட்டும் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அங்கு காங்கிரஸ் 25 இடங்களிலும் என்பிபி 12 இடங்களிலும் மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த மாநிலத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்