காலமானார் மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான முரளி தியோரா

திங்கள், 24 நவம்பர் 2014 (09:23 IST)
மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான முரளி தியோரா உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார்.
 
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முரளி தியோரா, மும்பையில் அதிகாலை 3.25 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 77.
 
இருவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் காங்கிரஸ் கட்சியின் மஹாராஸ்டிரா மாநில தலைவராக 22 ஆண்டுகள் பணியாற்றியவர்.
 
முரளி தியோரா காங்கிரஸ் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.
 
பொருளியல் பட்டதாரியான முரளி தியோரா பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 1977 முதல் 1978 வரையில் மும்பை மாநகர மேயராக பணியாற்றினார்.
 
பின்னர் மும்பை தெற்கு தொகுதியில் இருந்து 4 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்த தொகுதி அவருடைய மகன் மிலிந்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் வெற்றி பெற்று அமைச்சராகப் பணியாற்றியவர். மிலிந்தி தற்போது மாநிலங்கனவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்