மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : இன்று தீர்ப்பு

திங்கள், 14 செப்டம்பர் 2015 (12:55 IST)
மும்பை ரயில்குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 12 பேருக்குமான தீர்ப்பு விவரங்களை சிறப்பு நீதிமன்றம் இன்று அளிக்க உள்ளது.
 
மும்பையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி 7  புறநகர் ரயில்களில் வைக்கப்பட்டிருந்த  ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலில் 188 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர். 829 பேர் படுகாயமடைந்தனர்.
 
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் தொடர்புடைய  12 பேர் குற்றவாளிகள் என தீவிரவாதத்திற்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.


 
 
இந்தநிலையில் குற்றவாளிகளுக்கான தீர்ப்பு விவரங்களை சிறப்பு நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளது.
 
இதனை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகள் பலருக்கு மரண தண்டனையும், சிலருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்