மகராஷ்டிராவில் ரயில் தடம்புரண்டத்தில் 18 பேர் பலி

ஞாயிறு, 4 மே 2014 (17:50 IST)
மகராஷ்டிராவில் திவா-சவந்த்வாடி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகியுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் நிதி கிராமத்தில் திவா-சவந்த்வாடி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஞ்ஜீன் மற்றும் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 
 
இவ்விபத்தில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைவாக சம்பவ இடத்திற்கு வந்த  மீட்பு குழுவினர் ரயில் பெட்டிகளில் சிக்கியிருந்தவர்களை கிராம மக்களின் உதவியோடு மீட்டனர்.
 
இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுமென தெரிவித்த ரயில்வே அமைச்சர் மலிகார்ஜுன் கார்கே விபத்தில் பலியானவர்களுக்கு ரூ. 2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 மற்றும் சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ. 10,000 நிவாரண நிதி அளிக்கப்படுமென தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்