வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது: குடியரசுத்தலைவர் வழங்கினார்

திங்கள், 26 ஜனவரி 2015 (13:27 IST)
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டு இன்னுயிரை நீத்த ராணுவ  முகுந்த் வரதாராஜன் மற்றும் நீரஜ் குமார் ஆகியோருக்கு அசோக் சக்ரா விருதை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். 
 
ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியன் பகுதிகளில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்திருந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை எதிர்த்து போரிடும் போது ராணுவத்தின் 44 ஆவது ரஷ்ரிய ரைபிள் படைபிரிவில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார்.
 
அவர் மூன்று தீவிரவாதிகளையும் சுட்டுக்கொன்றபின்னர் தன் இன்னுயிரை நீத்தார். அவரது வீர மரணத்தை கௌரவிக்கும் வகையில், குடியரசு தின விழாவில் முகுந்த் வரதராஜன் மனைவி இந்துவிடம் அசோக் சக்ரா விருதை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
 
சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை ஆபீசர்ஸ் அகாடமியில் பயின்று ராணுவத்தில் சேர்ந்தார்.
 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள சோபியான் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் ராணுவ மேஜராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது கூறத்தக்கது.
 
அதேபோன்று, கடந்த ஆகஸ்ட் மாதம் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்ட போது நீரஜ்குமார் சிங் என்ற ராணுவ ஜவான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
அவருக்கு அசோக் சக்ரா விருதை அவரது சார்பில் அவரது மனவி பர்மேஷ்வரி தேவியிடம் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்