ஸ்மிருதி இராணி ஜவுளித்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இதனை வைத்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை ஐக்கிய ஜனதாதள எம்.பி., அலி அன்வர் ஆபாசமாக விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவை மாற்றம் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதாதள எம்.பி., அலி அன்வர் ஜவுளித்துறை ஸ்மிருதி இராணிக்கு ஒதுக்கியது அவரது உடலை மூட உதவும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ராஜ்யசபா எம்.பி. ஒருவரே பெண் மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவரை இப்படி ஆபாசமாக விமர்சித்திருப்பது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.