லாலுவுக்கு இதய ஆபரேஷன்: விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

புதன், 27 ஆகஸ்ட் 2014 (16:27 IST)
லாலு பிரசாத் இதய அறுவை சிகிச்சை ஆபரேஷன் இன்று நடைபெற்றது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
மும்பையில் உள்ள ஆசியன் இதயவியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முதற்கட்ட பரிசோதனையில் இருதயத்தில் உள்ள வால்வுகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு இன்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
 
இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள லாலு விரைவில் குணமடையவேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை தருமாறு இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்