நேதாஜி குடும்பத்தினர் 50 பேரை சந்திக்க மோடி முடிவு

செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (06:30 IST)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடந்த 8 நாட்களில் 7 முறை அழைப்பு விடுத்துள்ளனர்.
 

 
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடப்போவதாக அறிவித்தார். அதே போன்று, ரகசிய ஆவணங்கள் என கூறப்படும் 64 பக்க  ஆவணங்களை வெளியிட்டு இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்த நிலையில், நேதாஜி குடும்பத்தினருக்கு மட்டும், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இருந்து, கடந்த 8 நாட்களில் மட்டும் 7 முறை அழைப்பு விடுத்துள்ளனர்.
 
நேதாஜி குடும்பத்தினரை அடுத்த மாதம் மோடி சந்தித்து பேச உள்ள நிலையில், அந்த சந்திப்பின் போது, நேதாஜி குடும்பத்தினர் கேட்க விரும்பும் கேள்விக்கு, பதில் கூற பிரதமர் சட்ட ரீதியாக தன்னை தயார் படுத்திக் கொள்ள விரும்பியதாக தெரிய வருகிறது.
 
இந்த நிலையில், நேதாஜி குடும்பத்தினர் சுமார் 50 பேரை, வரும் அக்டோபர் மாதம் பிரதமர் சந்திக்க உள்ளதை, தனது வானொலி உரை மூலம் மோடியும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்