மேலும், அந்த நோட்டுகளை வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான நடவடிக்கைகளை, மத்திய அரசு கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஆகிய 4 பேரும் ரகசியமாக இந்த திட்டம் குறித்து விவாதித்து வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.