வங்கி லாக்கர்களில் நகை வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு? : மோடியின் அடுத்த திட்டம்?

வெள்ளி, 11 நவம்பர் 2016 (10:54 IST)
வங்கி லாக்கர்களில் குறிப்பிட்ட கிராம்களுக்கு மேல் நகை வைத்திருப்பவர்கள், அதற்கு சரியான ஆவணங்களை காட்ட வேண்டும் என மத்திய அரசு விரைவில் அறிவிக்ககப்போவதாக வாட்ஸ் அப் செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது.


 

 
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி சமீபத்தில் அதிரடி அறிவிப்பை அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பீதியை கிளப்பியது. கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சி என மத்திய அரசால் கூறப்பட்டது. 
 
இந்நிலையில், இதுபோல் பல திட்டங்களை மத்திய அரசு கைவசம் வைத்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே கருப்புப் பணத்தை, தங்கம் மற்றும் நிலங்களில் முதலீடு செய்யப்படுவதை தடுப்பது பற்றி மத்திய அரசு சில திட்டங்களை வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், வங்கி லாக்கர்களில் அளவுக்கு அதிகமான தங்கத்தை வைத்திருப்பவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
 
தற்போது, ஒரு வாட்ஸ் அப் தகவல் வைரலாக பரவி வருகிறது. அந்த தகவலின் படி, 600 கிராமுக்கு மேல் வங்கி லாக்கர்களில் தங்கம் மற்றும் வைர நகைகள் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக அதற்குரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இல்லையெனில், அதன் மதிப்பீட்டின் படி 3 மடங்கு வரி செலுத்த வேண்டும்.
 
அரசு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் லாக்கர்கள் திறக்கப்பட்டு எடை சரிபார்க்கப்படும் என்றும் விரைவில் வங்கி லாக்கர்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் அந்த தகவல் கூறுகிறது.
 
ஆனால், இதுபற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. 

 

வெப்துனியாவைப் படிக்கவும்