மோடியின் தூய்மை இந்தியா திட்டம் அதிகாரிகளை நீக்கும் திட்டம் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

வியாழன், 3 செப்டம்பர் 2015 (19:36 IST)
மோடியின் தூய்மை இந்தியா திட்டம் உயர் அதிகாரிகளை நீக்கும் திட்டமாக செயல்படுகிறது என்று ஆம் ஆத்மி தொடர்பாளர் அசுதோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
 
கடந்த இரண்டு நாட்களில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விருப்ப ஒய்வு பெற்றுள்ளனர். இதில் பல அரசியல் காரணங்கள் இருக்கிறது. நீக்கப்பட்ட அதிகாரிகள் நேர்மையாக பணியாற்றி உள்ளனர். இந்த நீக்கத்தில் வெவ்வேறு சித்தாந்தத்தை கையாண்டு உள்ளனர் என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அசுதோஷ் குப்தா கூறியுள்ளார்.
 
மோடியின் தூய்மை இந்தியா திட்டம் இந்தியாவை சுத்த படுத்தவில்லை, அதிகாரத்தினால் இந்தியாவை சுத்தபடுத்தி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
 
குஜராத் மாநில ஐஏஎஸ் அதிகாரி விஜயலஷ்மி ஜோஷி தனிப்பட்ட காரணங்களுக்காக விருப்ப ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து கடந்த திங்களன்று உள்துறை செயலாளர் எல்.சி.கோயலும் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
 
இவர்கள் மோடியின் அதிகாரத்தினால் தான் விருப்ப ஒய்வு பெற வைக்கப்பட்டு உள்ளனர் என்று அசுதோஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்