விவசாயிகளை பிரதமர் மோடி புறக்கணிக்கிறார் : ராகுல் காந்தி

வியாழன், 10 செப்டம்பர் 2015 (14:40 IST)
தொழிலதிபர்கள் மீது கவனம் செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். 
 
ஒரிசாவில் உள்ள பர்ஹராவில் விவசாயிகளிடையே ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், "தொழிலதிபர்கள் மீது கவனம் செலுத்தும் அரசு விவசாயிகளை புறக்கணித்துவிடுகிறது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்". 


 
 
"விவசாயிகளுக்கு எதிரான நில ஆஜீர்தச் சட்டத்தை தேசிய ஜனநாயகக் கட்சி தான் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. எப்படி இருந்தாலும் நில ஆஜீர்தச் சட்டத்தை மக்களவையில் நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக்காது".  என்று தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்