தியானநிலையில் மோடி – வைத்து செய்யும் நெட்டிசன்கள் !

சனி, 18 மே 2019 (17:40 IST)
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்ததை அடுத்து மோடி இன்று கேதார்நாத் குகைக்கோயிலில் தியானத்தில் ஈடுபட்டுவருகிறார்.

புகைப்படம் நன்றி: ANI

மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிப்வு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 21 ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்கான பிரச்சாரம் இன்றோடு முடிகிறது. இதையடுத்து பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் நேற்று கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

ஆனால் அதன் பின் பத்திரிக்கையாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் மோடி பதில் அளிக்காமல் அமித் ஷா பக்கம் கைகாட்டினார். பெரும்பாலான கேள்விகளுக்கு அமித்ஷாவே பதில் அளித்தார். இதனால் இது மோடியின் பிரஸ்மீட்டா அல்லது அமித்ஷாவின் பிரஸ்மீட்டா என சமூகவலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

இதையடுத்து இன்று மோடி கேதார்நாத் குகைகளில் தியானம் செய்ய சென்றுள்ளார். இன்று பிற்பகலில் இருந்து நாளைக் காலை வரை மோடி அங்கு தியான நிலையில் இருக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி தியானம் செய்வது போன்ற புகைப்படம் வெளியானதை அடுத்து சமூக வலைதளங்களில் பலரும் அதனைக் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அதற்குக் காரணம் மோடி தங்கியிருக்கும் குகை ஒரு ஹோட்டல் அறைப் போல மெத்தைகள் மற்றும் ஜன்னல்கள் வைத்து இருப்பதே. அதுமட்டுமல்லாமல் நேற்று பிரஸ்மீட்டிலும் ஒரு கேள்விக்கும் பதில்  சொல்லாமல் மௌனமாக தியானத்தில் இருப்பது போலதானே இருந்தார். அப்புறம் இன்று தனியாக தியானம் எனவும் நெட்டிசன்கள் கிண்டல் செய்ய ஆர்ம்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்