தேர்தலுக்கு முன்பே ஜனாதிபதியை முடிவு செய்த மோடி

திங்கள், 17 ஜூலை 2017 (12:31 IST)
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவின் 14வது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று நடைப்பெற்றது. நாடு முழுவதும் உள்ள 4895 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். பாஜக சார்ப்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் வெற்றிப் பெற அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரம்நாத் கோவிந்துக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்துள்ளர்.
 
இதுகுறித்து மோடி கூறியதாவது:-
 
பிரதமராக மோரர்ஜி தேசாய் பதவியில் இருந்தபோது அவரது உதவியாளராக ராம்நாத் கோவிந்த் செயல்பட்டார். அவரது வெற்றிக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்கிறேன். அவருக்கு எனது அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்