துறவிபோல் நடித்து 90 சதவீத மக்களை ஏழைகளாக்கிவிட்டார்: மாயாவதி

ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (15:21 IST)
ரூபாய் நோட்டு விவகாரத்தில் துறவிபோல் நடித்து 90 சதவீத மக்களை ஏழைகளாக்கிவிட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
 


 


 
பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் முரதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன்தான் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இது, அடிமட்டத்தில் இருந்து ஊழலை ஒழிக்கும் கடுமையான போராக இருக்கும் என்று கூறினார்.
 
பிரதமர் கருத்துக்கு பதில் தெரிவிக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உடனடியாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
பிரதமர் நரேந்திர மோடி பலவீனமானவராக உள்ளார். தனது பலவீனத்தை மக்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு திட்டத்தை அவர் திடீரென அறிவித்து மக்களின் கவனத்தை வேறு பக்கமாக திசை திருப்பி உள்ளார்.
 
தனக்கு தனிப்பட்ட முறையில் அரசியல் ரீதியாக பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்திருக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்