மொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த இந்திய ராணுவம் தடை

புதன், 16 மார்ச் 2016 (00:10 IST)
ஒரு சில மொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த இந்திய ராணுவம் தடை விதித்துள்ளது.
 

 
மொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த இந்திய ராணுவம் தடை விதித்துள்ளது. குறிப்பாக, கூகுள் பிளே ஸ்டோர் மூலம் வீசாட், ஸ்மெஷ், லைம் ஆகிய 'ஆப்ஸ்'கள் அதிக அளவில் பொது மக்கள் பதிவிறக்கம் செய்கின்றனர்.
 
இதில் ஸ்மெஷ் என்ற ஆப்ஸ் 'வாயிலாக பாகிஸ்தான் ராணுவம் நமது ராணுவத்தினரை உளவு பார்ப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து கூகுள் வலைதளம் தனது பிளே ஸ்டோரில் இருந்த அதனை நீக்கியது.
 
இதே போன்று, வேறு இரு 'ஆப்ஸ்'கள் மூலம், ராணுவம் தொடர்பான மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்களை பாக்கிஸ்தான்  வேவு பார்ப்பதாக தகவல் வெளியானது.
 
இதையடுத்து, ஸ்மெஷ், வீசாட், லைம் ஆகிய ஆப்ஸ்களை இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்