மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பிரியா ரமணி என்ற பத்திரிக்கையாளர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ஏறக்குறைய 40 ஆண்டு கால பத்திரிகை அனுபவம் கொண்டவர். பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் தன்னுடைய பதவிக் காலத்தில் இந்த பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்துகொண்டதாக சிலா் மீ டூ (MeToo) என்ற ஹேஷ்டேக்கில் குற்றம் சாட்டியிருந்தனா். நைஜீரியாவில் தங்கியிருந்த அக்பா் பதவி விலகக் கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.