'பாகுபலி 2' படத்தைவிட பத்து மடங்கு வசூல் தரும் படம் வேண்டுமா? மார்க்கண்டே கட்ஜூ ஐடியா

வெள்ளி, 5 மே 2017 (05:00 IST)
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ, கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராடத்தில் இருந்தே தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது புதிய கருத்துக்களை கூ'றி வரும் அவர் தற்போது பாகுபலி 2 படத்தின் வசூலைவிட பத்து மடங்கு அதிக வசூல் தரும் படத்தை எடுப்பது எப்படி என்ற ஐடியாவை கொடுத்துள்ளார்



 


இதுகுறித்து அவர் தன்னுடைய பிளாக் பக்கத்தில் கூறியதாவது:  
ஹாலிவுட்டில், மனிதக் குரங்குகள் பூமியை வெற்றி கொண்டு மனிதர்களை அவற்றின் அடிமைகளாக வைத்திருக்கும் படம் 'பிளானட் ஆப் தி ஏப்ஸ்'. இப்படம் ஹாலிவுட்டில் ஹிட்டோ ஹிட். இந்தப் படத்தை அப்படியே தமிழில் 'பிளானட் ஆப் தி கவ்ஸ்' என்று ரீமேக் செய்தால் படம் பாகுபலி2 வை விட 10 மடங்கு வசூல் படைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பசுவதை, பசுக்களுக்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை, மாட்டுக்கறி தின்றால் தண்டனை என பரபரப்புடன் இருக்கும் நிலையில் பாலிவுட் இயக்குனர்கள் பிளானட் ஆப் தி ஏப்ஸ் போல பிளானட் ஆப் தி கவ்ஸ் என்ற படத்தை எடுக்கலாம் என்றும், அந்தப் படத்தில் பசுக்கள் மனிதர்களை அடிமைகளாக்கி வேலை வாங்கும் சுவாரஸ்யமான காட்சிகள் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் கொண்டு வந்தால் பாகுபலி படத்தை விட பத்து மடங்கு அதிக வசூலை பெறலாம் என்றும் அவர் ஐடியா கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்