மோடி குற்றச்சாட்டுக்கு மன்மோகன் சிங் மறுப்பு அறிக்கை

திங்கள், 11 டிசம்பர் 2017 (17:50 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரதமர் பதவியை இழந்த பின்னர் தீவிர அரசியலில் இருந்தும் ஒதுங்கி இருந்து வருகிறார். எப்போதாவது மட்டுமே கட்சி அலுவலகம் வரும் அவர் மீது சமீபத்தில் பிரதமர் மோடி பெரும் குற்றச்சாட்டு ஒன்றை தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார். அதாவது மணிசங்கர் அய்யர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் பாக். தூதரக அதிகாரிகளுடன் மன்மோகன்சிங் ஆலோசனை செய்ததாகவும், அகமது பட்டேலை முதல்வராக்க பாகிஸ்தான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்

இந்த குற்றச்சாட்டுக்கு மன்மோகன்சிங் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மணிசங்கர் அய்யர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன், இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து மட்டுமே ஆலோசனை செய்ததாகவும், குஜராத் தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பதிலளித்துள்ளார்

மேலும் பிரதமர் எனும் பெரும் பதவியில் இருக்கும் மோடி, இதுபோன்ற தவறான கருத்துக்களை தெரிவிப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றும் மன்மோகன்சிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்