நாளை இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு கருப்பு தினம்: மன்மோகன் சிங் விமர்சனம்!!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (18:59 IST)
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நாளையோடு ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இது குறித்து மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார். 


 
 
முன்னரே ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, புல்லட் ரெயில் திட்டம் ஆகியவற்றை விமர்சனம் செய்த மன்மோகன் சிங் மேலும், உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை திட்டமிடப்பட்ட சட்டபூர்வ கொள்ளை என விமர்சனம் செய்தார். 
 
தற்போது, ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்திற்கு ஒரு கருப்பு தினமாகும். உலகில் எந்த பகுதியிலும் ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்ற ஒரு நிர்பந்திக்கப்பட்ட நடவடிக்கையானது எடுக்கப்படவில்லை என விமர்சனம் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்