மங்கள்யான் விண்கலம் இன்னும் 75 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் - இஸ்ரோ

ஞாயிறு, 13 ஜூலை 2014 (11:40 IST)
இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 75 நாட்களில், செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழ சத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறிய இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி செலுத்தப்பட்டது.
 
மங்கள்யான் அதன் 11 மாத பயணத்தில் உள்ள நிலையில், அது இன்னும் 75 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில், மங்கள்யான் பயணிக்க வேண்டிய 680 மில்லியன் கீ.மி தூரத்தில் தற்போது 525 மில்லியன்  கி.மீட்டர் தூரத்தை கடந்திருப்பதாகவும், மங்கள்யான் விண்கலதிற்கும், பெங்களூருவிலுள்ள தொலைத் தொடர்பு மையத்துக்கும் இடையே தகவல் பரிமாற்றத்துக்கு 15 நிமிடங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்