யோகக்காரண்டா நீ... ஒரே மேடையில் ரெண்டு கல்யாணம்!

வெள்ளி, 13 டிசம்பர் 2019 (17:06 IST)
ஒரே மேடை அக்கா - தங்கை என இருவரையும் திருமணம் செய்துள்ளார் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர். 
 
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் கவுதவிளி கிராமத்தைச் சேர்ந்தவர் திலிப் என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வினிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் உள்ளனர்.
 
ஆனால், வனிதாவுக்கு உடல்நலம் குன்றியதால் தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ள வனிதாவின் சகோதரி ரச்னா என்னும் பெண்ணை, வனிதாவின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
 
ஆம், முதல் மனைவி வினிதாவையும் அவருடைய சகோதரி ரச்னாவையும் ஒரே மணமேடையில் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்