ஜார்கண்ட் மாநிலத்தில் மர்ம நபர் ஒருவர் ஆசிரியையில் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு 5 கி.மீ தூரம் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் செராய்கெலா மாவட்டத்தில் இயங்கி வரும் கபரசாய் துவக்க பள்ளியில் சுக்ரா ஹெசா(30) என்பவர் பணியாற்றி வந்தார். பள்ளியில் உணவு இடைவேளையின் போது மர்ம நபர் ஒருவர் ஆசிரியை அவரது வீடு வரை இழுத்துச் சென்றுள்ளார்.
வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து ஆசிரியையின் தலையை வெட்டி துண்டித்துள்ளார். இதனை பார்த்த பொது மக்கள் அந்த மர்ம நபர் மீது கல் வீசியுள்ளனர். இதன்பின்னர் அந்த மர்ம நபர் அசிரியையின் தலையோடு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் 5 கி.மீ தூரம் வரை ஓடியுள்ளார்.
பொதுமக்கள் அளித்த தகவலின்படி காவல்துறையினர் அந்த மர்ம நபரை பிடித்து விசாராணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
ஆசிரியையின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.