ஓட்டு போடுவதற்காக இரண்டு லட்சம் செலவு செய்த குடிமகன்

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (19:59 IST)
தேர்தலில் ஓட்டு போடுவதற்கக சவுதி அரேபியாவிலிருந்து ரூ. 2 லட்சம் செலவு செய்து பீகாரில் உள்ள சொந்த ஊருக்கு வந்தவரைப் பற்றிய ஆச்சர்யமான தகவல் வெளியாகியிருக்கிறது.


 

 
சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருபவர் முகம்மது அதிகுர் ரகுமான். இவர் பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியை சேர்ந்தவர் . 
 
இப்போது பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. நேற்று(அக்.12) சமஸ்திபூர் உள்ளிட்ட 49 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 
 
இந்த தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காகவே, முகம்மது அதிகுர் ரகுமான், சவுதி அரேபியாவில் இருந்து ரூ. 2 லட்சம் செலவு செய்து சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இது அந்த கிராமத்து மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுபற்றி, முகம்மது அதிகுர் ரகுமான் கூறியபோது "பீகார் மாநிலத்தி்ல சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக சொந்த கிராமத்திற்கு வந்துவிட்டேன். தேர்தலில் ஓட்ட போட்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ரகுமான் கூறியுள்ளார்.
 
சொந்த ஊரில் இருந்து கொண்டே ஓட்டு போடாதவர்கள் மத்தியில் முகம்மது நிச்சயம் உயர்ந்தவராக கருதப்படக் கூடியவர்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்