தமிழகத்துக்காக குரல் கொடுத்த மம்தா பானர்ஜி: தலைமை செயலாளர் வீடு ரெய்டுக்கு கண்டனம்!

புதன், 21 டிசம்பர் 2016 (15:47 IST)
தமிழக தலைமை செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


 
 
தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தமிழக தலைமைச்செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினாலும் இது அரசியல் காரணங்களுக்காக நடக்கும் சோதனை என கூறப்படுகிறது.
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே டெல்லி தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
 
இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்படுவது கூட்டாட்சியை சீர்குலைக்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாஜக தலைவர் அமித் ஷாவின் வீட்டில் சோதனை நடத்தி கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டியது தானே என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்