நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் - மம்தா

வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (19:42 IST)
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
 
நாங்கள் நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம். நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெளிவாக தெரிவித்துவிட்டோம். வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக நான் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவள் என்றார். மேலும் கூறுகையில், வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான எங்களுடைய நடவடிக்கை, கொடூரமான 1894 ஆம் ஆண்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ஒழிக்கவேண்டிய தேவையை தூண்டியது என்றும் குறிப்பிட்டார்.
 
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் பேரணியில் ராஜஸ்தான் மாநில விவசாயி கஜேந்திர சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது மிகவும் துரதிஷ்டவசமானது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்