கேரளாவை அடுத்து மேலும் ஒரு மாநிலத்தில் முழு ஊரடங்கு: தமிழகத்தில் எப்போது?

வியாழன், 6 மே 2021 (18:23 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்றும் அப்போது தான் இந்திய மக்களை காப்பாற்ற முடியும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் இருப்பினும் மத்திய அரசு இதுவரை நாடு முழுவதுக்குமான முழு ஊரடங்கு பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் பல்வேறு மாநிலங்கள் தங்களுடைய மாநில அளவில் ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றனர். கேரளா உள்பட ஒருசில மாநிலங்களில் ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது வந்த தகவலின் படி மத்திய பிரதேச மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று முதல் மே மாதம் 15ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும், அதன் பிறகு கொரோனா பரவல் இருக்கும் நிலைமையை பொறுத்து முழு ஊரடங்கு நீடிப்பதா அல்லது நீக்கி கொள்வதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்