உலகில் மனிதன் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகள் முன்னதாக பூமியில் வாழ்ந்தவை டைனோசர் என்னும் ராட்சத பிராணிகள். பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல பகுதிகளில் ஆய்வுகளில் இவற்றின் எலும்பு கூடுகள், முட்டைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. டெதிஸ் கடல், நர்மதை ஆற்றுடன் இணையும் இடத்தில் உருவான கழிமுகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த டைனோசர் முட்டைகள் கூடுகளுடன் அமைந்திருந்துள்ளன. கூடுகள் ஒவ்வொன்றும் அருகருகே அமையப்பெற்றுள்ளன.